தென்னையில் நோய் தாக்குதல் வேளாண் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் நோய் தாக்குதல் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 20, 2020
Share
முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், சாம்பக்குளம், கேளல், கே.ஆர்.பட்டணம் உட்பட பல்வேறு கிராமங்களில் தென்னையில் பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.கிராமங்களில் சுருள் வெள்ளை,பூச்சி வெட்டு தடுப்பு முறைகளால் கட்டுக்குள் இருந்தது. தற்போது மகசூல் தரக்கூடிய நேரத்தில் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், சாம்பக்குளம், கேளல், கே.ஆர்.பட்டணம் உட்பட பல்வேறு கிராமங்களில் தென்னையில் பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் சுருள் வெள்ளை,பூச்சி வெட்டு தடுப்பு முறைகளால் கட்டுக்குள் இருந்தது. தற்போது மகசூல் தரக்கூடிய நேரத்தில் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது.வேளாண்மைத்துறை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்தனர்.

வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் கூறியதாவது: ஒருசில மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் இருந்தது.இதனை கட்டுபடுத்த போரேட் 10ஜி என்ற மருந்தை மரத்திற்கு 5 கிராம் அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டிற்கு ஒருமுறை வைத்து கட்டுப் படுத்தலாம்.மேலும் மரத்தில் சத்து பற்றாக்குறைபாட்டை சரிசெய்ய தென்னை நுண்ணுாட்டம் கலவை என்ற மருந்தை ஆண்டிற்கு ஒருமுறை ஒரு கிலோ வீதம் மணலுடன் கலந்து நீர்பாய்ச்ச வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X