அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில்கள் மீது தாக்குதல்: ராமதாஸ் கடும் கண்டனம்

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கோவில்கள் மீது தாக்குதல்: ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை : 'ஐம்பது மாதங்களாகியும் விசாரிக்கப்படாத, 'நீட்' நுழைவு தேர்வு வழக்கை, உடனே விசாரிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவரையும் சேர்த்து, நீட் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வில் இருந்த, ஐந்து நீதிபதிகளும் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கின் விசாரணை, ௫௦ மாதங்களாகியும், இன்னும் துவங்கவில்லை; இது பெரும் அநீதி. எனவே, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கை, உடனே விசாரணைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, புதிய அரசியலமைப்பு சட்ட அமர்வை அமைக்க வேண்டும். விரைவில், விசாரணைக்கு எடுக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சேதம் கண்டனம்'டுவிட்டர்' பக்கத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:கோவையில், மூன்று கோவில்கள், மர்ம நபர்களால் சேதப்படுத்தப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை தேவை.தமிழகத்தில் கோவில்களை சேதப்படுத்தியும், கடவுள்களை இழிவுபடுத்தியும், மத மோதல்களை துாண்ட சதிகள் நடக்கின்றன. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும், அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும்; மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-ஜூலை-202012:15:16 IST Report Abuse
skv srinivasankrishnaveni பலஜனம் இதுக்கே எவனும் கவலைப்பதாலேயே சாமி இந்தாளோட பாசங்கக்கண்டு எவனும் சீந்தவேமாட்டான்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-ஜூலை-202010:57:36 IST Report Abuse
vbs manian நாத்திகம் பேசும் எதிர் கட்சிகளுக்கு இடையில் ஒரு ஆத்திகர்.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
20-ஜூலை-202006:42:37 IST Report Abuse
svs தமிழகம் முழுக்க இந்த காரோண காலத்தில் ஒரே ஜாதி தகராறு ....இதுவும் பெரிய சமூக அநீதி ....இதைப்பற்றி தீர விசாரித்து இதற்கும் தீர்ப்பு வழங்குங்க அய்யா ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X