சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயிற்சியில் ஈடுபட்டபோலீசாருக்கு கொரோனா

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பெரியகுளம்:பெரியகுளம் டி.எஸ்.பி., சப்டிவிஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் இருந்து எஸ்.ஐ., போலீசாருக்கு தென்கரை ஸ்டேஷன் அருகே மைதானத்தில் மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பயிற்சிக்கு பிறகு பெரியகுளம் என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த கொரோனா கணக்கெடுப்பு அலுவலரான 49 வயது சிறப்பு எஸ்.ஐ., 38 வயது தென்கரை போலீஸ்காரர்கள் இருவர், 40 வயது வடகரை போலீஸ்காரர் , 40 வயது ஜெயமங்கலம் போலீஸ்காரர் ஆகிய 5 பேரும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயரதிகாரிகள் கூறிவிட்டனர் என்பதற்காக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அவசரகதியாக 100 பேருக்கு ஒரே பயிற்சி வகுப்பாக நடத்தியதால் தொற்று பரவியதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X