சாகுபடி விரிவாக்கம்ரூ.2.67 கோடி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடி விரிவாக்கம்ரூ.2.67 கோடி ஒதுக்கீடு

Added : ஜூலை 20, 2020
Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2020---21ம் ஆண்டிற்கு ரூ.2.67 கோடி செலவில் சாகுபடி விரிவாக்கம், மானியம் வழங்கப்பட உள்ளது. வீரிய ரக காய்கறிகள், முருங்கை, மா, கொய்யா, பப்பாளி, மிளகாய் பரப்பு விரிவாக்கத்தில் 670 எக்டேர் இலக்கிற்கு ரூ.1.22கோடி ஒதுக்கப்பட்டு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2020---21ம் ஆண்டிற்கு ரூ.2.67 கோடி செலவில் சாகுபடி விரிவாக்கம், மானியம் வழங்கப்பட உள்ளது.

வீரிய ரக காய்கறிகள், முருங்கை, மா, கொய்யா, பப்பாளி, மிளகாய் பரப்பு விரிவாக்கத்தில் 670 எக்டேர் இலக்கிற்கு ரூ.1.22கோடி ஒதுக்கப்பட்டு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் காய்கறி சாகுபடி, நிலப்போர்வை ஊக்கப்படுத்துதல், பணிமனை இயந்திர மயமாக்கல், விவசாயிகளுக்கு பயிற்சி, தேனீபெட்டி வைத்தல், நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்குதல்ஆகிய திட்டத்திற்கு ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர்,அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்(பொ) அழகுமலை தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X