செய்திகள் சில வரிகளில் : தேனி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் : தேனி

Added : ஜூலை 20, 2020
Share
நகராட்சி அலுவலகம் மூடல்சின்னமனுார்: சின்னமனுார் நகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி அலுவலக பணியாளர்களுக்கு மேற்கொண்ட சளி, உமிழ்நீர் பரிசோதனையில் இரு எழுத்தர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அலுவலகம் மூடப்பட்டது.'போக்சோ'வில் கைதுபோடி-: போடி புதுக்காலனி 15

நகராட்சி அலுவலகம் மூடல்

சின்னமனுார்: சின்னமனுார் நகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி அலுவலக பணியாளர்களுக்கு மேற்கொண்ட சளி, உமிழ்நீர் பரிசோதனையில் இரு எழுத்தர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அலுவலகம் மூடப்பட்டது.

'போக்சோ'வில் கைது

போடி-: போடி புதுக்காலனி 15 வயது சிறுவன் இதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அச்சிறுவனை போடி டவுன் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

தொடுதிரை இயந்திரம் பழுது

பெரியகுளம்: பொதுமக்களுக்கு தேவையான பட்டா மாறுதல், பட்டா பெறுதல், பெயர் உட்பட அனைத்து தகவல்களையும் ரூ.2 கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ள பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தொடுதிரை இயந்திரம் அமைக்கப்பட்டது. பழுதாகி பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்பட்டவில்லை. பொதுமக்கள் சிரமப்படுவதால் பயன்பாட்டிற்குவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X