சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலம் மீது உரசிய படகு சேதம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை துாத்துக்குடி விசைப்படகு கடந்து சென்ற போது, உரசியதால் படகு சேதம் அடைந்தது.

துாத்துக்குடி தரவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில், சீசனுக்கு நாகை கடல் பகுதியில் மீன்பிடித்தனர். சீசன் முடிந்ததும் சொந்த ஊர் உள்ள நேற்று பாம்பன் வந்தனர். வழக்கத்தை விட நேற்று பாம்பன் கடல் கொந்தளிப்பு இன்றி குளம் போல் கிடந்ததால், திறக்காத பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடக்க முயன்றனர்.

அப்போது படகின் டிரைவர் அறை மேல்பகுதி பாலத்தை உரசியதால், சப்தம் எழுந்தது. இதில் படகிற்கு லேசான சேதம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் ரயில் பாலம் மீது மூன்று தடவை படகுகள் மோதியதால், பாலத்தின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X