சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை செல்ல முயன்ற அகதி கைது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற மனநலம் பாதித்த அகதியை போலீசார் கைது செய்தனர்.இலங்கை வவுனி யாவைச் சேர்ந்த ரவிச் சந்திரன் மகன் துசந்தன்24, இவர் பெற்றோருடன் 2008ல் அகதியாக தமிழகம் வந்து, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முகாமில் தங்கியிருந்தார்.

இலங்கையில் அமைதி திரும்பியதும், 2013ல் மீண்டும் குடும்பத்துடன் விமானத்தில் இலங்கை சென்றார்.ஆனால் இலங்கையில் துசந்தனுக்கு மனநலம் பாதித்ததும், சிகிச்சைக்கு 2020 ஜன.,ல் சென்னை வந்து, காங்கேயம் முகாமில் உள்ள அக்கா வீட்டில் தங்கியுள்ளார். ஊரடங்கினால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல், கள்ள படகில் இலங்கை செல்ல முடிவு செய்து, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் சுற்றி திரிந்த போது போலீசார் கைது செய்து, அவரது அக்காவிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X