எரியாத தெருவிளக்குகள்; பயனற்ற விளையாட்டு மைதானம்: இது அரண்மனைப்புதூர் ஊராட்சி 1வது வார்டு அவலம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

தேனி,:எரியாத தெருவிளக்குகள், பயனற்ற விளையாட்டு மைதானம், வீணாகும் குடிநீர் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறைவால் அரண்மனைப்புதுார் ஊராட்சி 1வதுவார்டு மக்கள் சிரமத்தில் தவிக்கின்றனர்.

இங்கு தேவநேய பாவாணர் ரோடு, அதன் குறுக்குத் தெருக்கள், அம்மா பூங்காத் தெரு, வள்ளலார் தெருவின் ஒரு பகுதி, ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது.ஊராட்சியால் சரளைக் கற்கள் பரவிவிடப்பட்டு செம்மண் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் செம்மண் அரித்து சென்றுவிட கற்கள் மட்டுமே மிஞ்சி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்.

விரைவில் தார்ரோடு அமைக்க வேண்டும். கழிவு நீரோடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.அவர்கள் கூறியதாவது:புதர்மண்டியுள்ளதுநடராஜன் : கழிவு நீரோடை சீரமைக்க 2 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்திடம்புகார் மனு வழங்கினேன். நடவடிக்கையும் இல்லை. அது சீரமைக்கப்படாமல் செம்மண் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பிரச்னை வரும் என்று தெரிந்தே வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் புதர் மண்டியுள்ளது. விளையாட்டு மைதானம் பயன்பாடின்றி கிடக்கிறது.

வீணாகும் குடிநீர்

சபரிநாதன்: இங்கு குடிநீர் பகிர்மானத்தை பிரிக்கும் கேட் வால்வு' பழுதால் அதில் இருந்து 6 மாதங்களாக குடிநீர் கசிந்து வீணாகிறது. அருகில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் எரியாததால் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. மெயின்ரோடு முழுவதும் குடிநீர் பகிர்மானத்திற்கு இரண்டு குழாய்கள் செல்கின்றன. அதனை முறையாக பதிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.சேதமடைந்த வேலிரமேஷ்: தெருவில் கழிவு நீரோடையில் கழிவுகள் தேங்கியுள்ளது. அதனை ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அகற்ற வராததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் காப்புக்காடுகள் தெருவிற்கு அருகில் உள்ளன. அதன் வேலி சேதமடைந்துள்ளதால் அம்மா பூங்கா அமைந்துள்ள தெருவில் மது அருந்தும் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர். பெண்கள் அச்சத்துடன் உள்ளனர். வேலி சீரமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X