ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்துவதில் தாமதம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கூடலுார்:லோயர்கேம்ப், பளியன்குடி, ஊமையன்தொழு, காஞ்சிமரத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து அவசர சிகிச்சை மற்றும் பிரசவங்களுக்கு கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டும்.

கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன் தினந்தோறும் 800 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தால் கம்பம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கு செல்வதற்கு முன் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

கூடலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் மேம்பட்ட சிகிச்சைபெற மக்கள் தவிக்கினறனர். இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X