பொது செய்தி

தமிழ்நாடு

ஊரணிகளில் நீர்மட்டம் உயர நடவடிக்கை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மட்டும் முகவை ஊரணி, நொச்சிவயல் ஊரணி, காட்டூரணி, நீலகண்டி ஊரணி, லட்சுமிபுரம் ஊரணி ஆகிய பெரிய ஊரணிகளும், செம்மங்குண்டு ஊரணி, சிதம்பரம்பிள்ளை ஊரணி, மல்லிகை கண்மாய் ஊரணி, வெளிப்பட்டினம் சிவன்கோயில் ஊரணி ஆகியவையும், நகரை ஒட்டி சோத்துாரணி, சாயக்கார ஊரணி, கிடாவெட்டி ஊரணி, அய்யனார் கோயில் ஊரணி, சம்பை ஊரணி, அய்யர் மடம் ஊரணி, இந்திரா நகர் ஊரணி, காட்டூரணி உள்ளிட்டவை உள்ளன.

இதில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து வடக்கு தெரு வழியாக நீலகண்டி ஊரணிக்கும், நொச்சிவயல் ஊரணி, மகர் நோன்பு பொட்டல் வழியாக லட்சுமிபுரம் ஊரணி நிரம்ப கால்வாய் வசதி உள்ளது. இந்த ஊரணிகளில் இருந்து பிற ஊரணிகளுக்கும் நீர்வரத்து வசதி உள்ளது. ஆனால் இந்த ஊரணிகளுக்கு செல்லும்நீர்வரத்து கால்வாய் முழுமையாக துார்ந்து போனது.இதனால் பெரிய அளவில் மழை பெய்தாலும் ஊரணிகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை தான் இன்றும் உள்ளது.பெரிய கண்மாயில் இருந்து நீலகண்டி ஊரணிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும். பருவ மழைக்கு முன் இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.அப்போதுதான் நகர் பகுதி குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் மக்ளின் தண்ணீர் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X