தமிழ்நாடு

அலட்சியம் வேண்டாம்:கொரோனா காட்டுத்தீபோல பரவி வருகிறது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement


இம்மாவட்டத்தில் கொரோனா காட்டுத்தீபோல பரவி வருகிறது. நேற்று வரை 2497 பேர் பாதிக்கப்பட்டனர். 1175 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 1287 பேர் தேனி மருத்துவக்கல்லுாரி உள்பட 9 கேர் சென்டர்களில் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு 44 ஆனது. ஜூலை 10 ஒரேநாளில் 108, ஜூலை 11 ல் 119, ஜூலை 12 ல் 115, அதிகபட்சமாக ஜூலை 17 ல் 175 பேரும், நேற்று முன்தினம் 144 என மளமளவென பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்னும் சில நாட்கள் தொற்று உச்சமடையும் என்கின்றனர் டாக்டர்கள்.

வெளி மாவட்ட வருகை குறைவுசிகிச்சையில் குணமடைவோர் 40 சதவீதமாக இருந்தாலும் தொடர்ந்து உயரும் பாதிப்பு மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைக்கிறது. மே, ஜூன் மாதங்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்தோரால் பாதிப்பு எனத்தெரிவிக்கப்பட்டது. தற்போது அவ்வாறு நோய் பாதிப்புடன் வருவோர் அதிகம் இல்லை. ஆனால் ஏற்கனவே பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தோருக்கு கொரோனா அறிகுறி வெளிப்படுகிறது. இதற்கு காரணம் மக்களிடம் விழிப்புணர்வு குறைவு, அலட்சியம் தொடர்கிறது. மாவட்டத்தின் பெரும் பகுதி கட்டுப்பாட்டில் இருந்தாலும் பாதிப்பு உயர்கிறது.

சமூக இடைவெளி இல்லை

தற்போது 80 சதவீத மக்கள் முக கவசம் அணிகின்றனர். ஆனால் கடைகளுக்கும், பொது இடங்களுக்கும் வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. பலர் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர்களுக்கு நோய் பாதிப்பு இருக்கும். இவர்கள்தான் 'ஏ சிம்டமேடிக்' உள்ளோர் என்கின்றனர். மக்கள் கூடும் இடங்களுக்கு இவர்கள் செல்லும் போது, இதை அறியாமல் மற்றவர்கள் இருவடன் பேசும்போது பரவுகிறது.

சுப நிகழ்ச்சிகளில் அதிகம்பேர் பங்கேற்கின்றனர்.ஷேர் ஆட்டோ, வாகனங்களில் மொத்தமாக பயணிப்பது பரவலுக்கு வழிவகுக்கிறது.எனவே தேவையின்றி வெளியில் வருவதையும், அப்படியே வந்தாலும் சமூக இடைவெளி பின்பற்றி கூடுதல் எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட்டதால்தான் நோயை தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X