பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஒருவர் பலி

நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் 70. சைக்கிளில் நிலக்கோட்டை நோக்கி வந்தார். எதிரே வந்த ஒட்டுப்பட்டி தனியார் மில் வாகனம் அவர் மீது மோதியது. மதுரை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

லாட்டரி பறிமுதல்: இருவர் கைது

நிலக்கோட்டை; தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிலக்கோட்டையில் ரோஜா, முல்லை, ராஜா, ராணி என விதவிதமான பெயர்களில் விற்கப்படுகின்றன. ஒரு சீட்டின் விலை ரூ.100. ஆன்லைன் குலுக்கல் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக எஸ்.பி.,யின் தனிப்பிரிவு போலீசார் நேற்று இருவரை கைது செய்தனர். 600க்கும் மேற்பட்ட லாட்டரிகளை போலீசார் கைப்பற்றினர்.

முழு ஊரடங்கில் ஆர்ப்பாட்டம்

சின்னாளபட்டி: சின்னாளப்பட்டியில் கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளை தலைவர் வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லுார் பசும்பொன் கல்லுாரியை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதை கண்டித்தும், மீட்டு அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஊரடங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு வந்து நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

மருத்துவ முகாம்

நிலக்கோட்டை: சித்தர்கள் நத்தம் ஊராட்சி, அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். டாக்டர் அரவிந்தன், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து மருந்து வழங்கினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X