பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு விதமான ஆட்டத்தில் மனிதர்களை பந்தாடும் கொரோனா வைரஸ்: லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

மதுரை: உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா (கோவிட் 19) தொற்று நோய், சார்ஸ் கோவ்-2 என்னும் நுாதன வைரஸால் உருவானது. இதற்கு முன்பு இந்நோயை உலகம் எதிர்கொண்டதில்லை என்பதால், இதை ஒழித்துக்கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. நோயை பற்றியும், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவும் சர்வதேச அளவில் பல ஆய்வுகள் நடக்கின்றன. இதில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன.latest tamil newsஅந்த வகையில், ஒரு புதிய விஷயத்தை லண்டன் கிங்ஸ் கல்லுாரி பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர். 'நாம் நினைப்பது போன்று கொரோனா ஒரே வகையான நோய் அல்ல. இதில் 6 தனித்துவமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் வேறுபட்ட நோய் அறிகுறிகளின் தொகுப்பு காணப்படுகிறது' என தெரிவித்துள்ளனர்.2200 பேரிடம் ஆய்வுமுன்னதாக தங்களின் ஆய்வுக்காக ஒரு செயலியை வடிவமைத்தனர்.


latest tamil newsஅதை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளை பதிவிடும்படி கொரோனா நோயாளிகளை கேட்டுக்கொண்டனர். பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடனை சேர்ந்த 2200 நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்ட தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, குழப்பம், பசியின்மை, சுவாசப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகளை பதிவிட்டனர்.இதன் மூலம் தங்களின் ஆய்வை துவங்கிய பேராசிரியர்கள், காய்ச்சல் அறிகுறியின்மை, காய்ச்சல் அறிகுறி, இரைப்பை குடல் பாதிப்பு, சோர்வு (தீவிர நிலை 1), குழப்பம் (தீவிர நிலை 2), வயிறு மற்றும் சுவாசப் பிரச்னை (தீவிர நிலை 3) என 6 வகையான நோய் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஒவ்வொரு தாக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கூட்டு அறிகுறிகள் இருந்தன. இதில் முதல் மூன்று வகை நோயாளிகள் லேசான, மிதமான பாதிப்புள்ளவர்கள். அடுத்த மூன்று வகை நோயாளிகள் தீவிர பாதிப்பு இருப்பவர்கள். அவர்களுக்கு சுவாசத்திற்கான உதவி தேவைப்படுவது தெரிந்தது.6 வகையான பாதிப்புஆறு வகையான நோய் தாக்கம் மற்றும் அவற்றின் அறிகுறிகள் விவரம்:

காய்ச்சல் அறிகுறியின்மை: தலைவலி, மணமின்மை, தசை வலி, இருமல், தொண்டை வலி, மார்பு வலி; ஆனால் காய்ச்சல் அறிகுறி இல்லை.n காய்ச்சல் அறிகுறி: தலைவலி, மணமின்மை, தொண்டை வலி, குரல் தடை, காய்ச்சல், பசியின்மை.n இரைப்பை குடல் பாதிப்பு: தலைவலி, மணமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி, மார்பு வலி, இருமல் இன்மை.

சோர்வு-தீவிர நிலை 1: தலைவலி, மணமின்மை, இருமல், காய்ச்சல், குரல் தடை, மார்பு வலி, சோர்வு.

குழப்பம்-தீவிர நிலை 2: தலைவலி, மணமின்மை, பசியின்மை, இருமல், காய்ச்சல், குரல் தடை, தொண்டை வலி.

வயிறு மற்றும் சுவாசக்கோளாறு-தீவிர நிலை 3: தலைவலி, மணமின்மை, பசியின்மை, இருமல், காய்ச்சல், குரல் தடை, தொண்டை வலி, மார்பு வலி, பசியின்மை, குழப்பம், தசை வலி, மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, வயிறு வலி.2ம் அலைக்கு உதவும்இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மூத்த பேராசிரியை டாக்டர் கிளய்ரி ஸ்டீவ் கூறுகையில், ''இந்த ஆராய்ச்சி முடிவுகள் நோயாளிகளை வகைப்படுத்தி மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோரை அடையாளம் காண உதவும்.

குறிப்பாக மூன்று வகை தீவிர நோய் தாக்கம் இருப்பவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, சர்க்கரை அளவை சரியான அளவில் பின்பற்ற இம்முடிவு உதவும். இதன் மூலம் இறப்புகளை பெருமளவு குறைக்க முடியும். பாதிப்பு குறைந்த நாடுகளில் இரண்டாவது அலை வீசினால் இம்முறை நல்ல பலன் தரும்' என தெரிவித்துள்ளார்.

உடல் பருமனால் ஆபத்து

ஆய்வு குறிப்பிடும் முதல் மூன்று வகையினருக்கு கண்காணிப்பு போதுமானது. ஆனால், இறுதி மூன்று வகையான அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவமனை சிகிச்சை தேவை. இம்மூன்று வகை பாதிப்பும், வயதானவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் உடல் பருமனால் அவதிப்படுவோருக்கே பெரும்பாலும் தொற்றி இருக்கிறது. எனவே உடல் பருமன் இருப்பவர்களும் கொரோனாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜூலை-202008:08:43 IST Report Abuse
Sampath Kumar ஆறுவிதமான ஆட்டம் இது எங்க ஆறுமுகத்தின் ஆட்டம் அழியப்போவது பொய் பித்தலாட்டம் ஆதிகார வெறிபிடித்த மிருகங்கள் ஆண்டவனுக்கு அல்வா kodukum எத்தர்கள் இறைவனை vaithu பிழைப்பு நடத்தும் எதிர் கோட்டங்கள் மனித நேயத்தை குழி தோண்டி puthaikum கொள்கை உடைய கும்பல் இன்னும் பிற kaluvukal எல்லாம் களை எடுக்கும் நேரம் இது சாவு மணி செந்தூரான் சாவு மணி ulkam ஏங்கும் ஓங்கி ஒலிக்கிறது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-ஜூலை-202014:43:14 IST Report Abuse
S. Narayanan உடற்பயிச்சி செய்து கட்டுப்பாடுகளோடு இருந்தால் கொரோனா அல்லது அவன் அன்னன் கூட நம்மை அண்ட முடியாது.
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
20-ஜூலை-202014:28:38 IST Report Abuse
R S BALA பல அரக்க தீய சக்திகளை கடவுள் அழித்ததை பல புராணங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம் ... அவ்வாறே இந்த கொடிய அரக்கனையும் தெய்வமே அடியோடு அழிக்க இயலும் என்பதை தவிர வேறு நம்பிக்கை நம்மிடம் இல்லை ... இந்து மத கடவுள் பக்தியுடைய ஒவ்வொருவரும் "கந்த குரு கவசம் ' படிக்க வேண்டுகிறேன் .. கலிதோஷம் நீங்க அற்புத கவசமாய் அதனை உணர்கிறேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X