தமிழ்நாடு

துவங்குவரா முழுமையான சித்த மருத்துவ சிகிச்சை மையம் ...

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 துவங்குவரா முழுமையான சித்த மருத்துவ சிகிச்சை மையம் ...

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். மாவட்டத்தில் அலோபதியுடன், சித்த மருத்துவத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

தீவிரநோய் தொற்றுக்கு ஆளாகி மூச்சுத் திணறலுக்கு உள்ளானோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சாதாரண மற்றும் லேசான அறிகுறி உடையவர்களை எம்.வி.எம்., கல்லூரி மையத்தில் அனுமதித்து சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோனோர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். வழக்கமாக 14 நாட்கள் சிகிச்சை பெறுவோர், சித்த மருத்துவ உதவியுடன் 7 நாட்களில் வீடு திரும்புகின்றனர். மேலும் இங்கு உயிரிழந்தோர் எவரும் இல்லை.அரசு கொரோனாவிற்கு கபசுரகுடிநீர், சித்தா மாத்திரைகள் உட்கொள்ள பரிந்துரைத்துள்ளது. இதனால் பொதுமக்களும் சித்த மருத்துவத்தை நாடிச் செல்வது அதிகமாகிறது.

எனவே, மாவட்டத்தில் முழுமையான சித்த மருத்துவ சிகிச்சை மையம் துவக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட சித்த மருத்துவர் டாக்டர் ரபீக் அகமது: எம்.வி.எம்., கல்லூரியில் அலோபதியுடன், சித்த மருத்துத்தையும் செயல்படுத்தி வருகிறோம். பல மாவட்டங்களில் தனியாக சித்த மருத்துவ மையத்திற்கு அரசு அனுமதித்துள்ளது. அதேபோல், கலெக்டரிடம் எடுத்துக் கூறி அனுமதி பெற உள்ளோம், என்றார்.\

சித்த மருத்துவ உதவி அலுவலர் டாக்டர் ஹசீனா: தற்போது நோயாளிகளுக்கு காலையில் கபசுர குடிநீர், மாலையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. காய்ச்சல், உடல் வலி உள்ளவர்களுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, இருமல் உள்ளவர்களுக்கு ஆடாதோடை மணப்பாகு வழங்கப்படுகிறது. சிகிச்சை முடிந்து திரும்புவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஆரோக்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. சித்த மருத்துவ மையம் துவங்கினால் குணமாவோர் விகிதம் நிச்சயம் உயரும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X