பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் அடுக்குமாடி குடியிருப்புகள்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் ரூ.122 லட்சத்தில் குடிசைமாற்று வாரியம் மூலம் 46 அடுக்கு மாடி குடியிருப்புகள் தயாராகி வருகிறது.மாவட்டத்தில் நீர்நிலை, சாலை, ரயில்வே புறம்போக்கு ஆக்கிரமிப்புகளில் 2925 பேர் குடியிருக்கின்றனர். இவர்களை அடுக்குமாடிகளில் மறுகுடியமர்வு செய்ய உள்ளனர். இதற்காக தேனி வடவீரநாயக்கன்பட்டியில் 13, தப்புக்குண்டில் 18, கோம்பையில் 15 அடுக்குமாடிகளில் மொத்தம் 1224 குடியிருப்புகள் கட்டுமானம் நடக்கிறது.

இதில் 376 வீடுகள் முடிந்துள்ளன. ஒவ்வொரு வீடும் 400 சதுர அடியில் வசதிகளுடன் உள்ளன. இதில் குடியிருப்பு பெற பயனாளிகள் பங்களிப்பாக ரூ. 1 லட்சம்,மத்திய அரசு பங்களிப்பாக ரூ.1.50 லட்சம், தமிழக அரசு பங்களிப்பில் ரூ.6 லட்சம் என ரூ.8.50 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு வழங்கப்படும்.இப்பணிகளை துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X