சம்பவம் செய்தி

தமிழ்நாடு

141 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

தேனி:தேனியில் போலீஸ்காரர், நீதிமன்றம், பொதுப்பணித்துறை ஊழியர்கள் உட்பட 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.அல்லிநகரம் சுக்குவாடன்பட்டி 37 வயது போலீஸ்காரர், 25 வயது பெண், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 37 வயது, 50 வயது பெண் ஊழியர்கள், பூமலைக்குண்டு 52 வயது பெண், அவரது 37 வயது மகன், அய்யப்பன் தெரு 74 வயது முதியவர், பழைய ஜி.ஹெச்., ரோடு முறையே 30, 29 வயது சகோதரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஜெயமங்கலம் தனியார் துவக்கப்பள்ளியின் 42 வயது ஆசிரியை, தென்கரை மாவட்ட நீதிமன்றத்தின் 32 வயது அலுவலக உதவியாளர், வைகை அணை பொதுப்பணித்துறை குடியிருப்பு முறையே 38, 32 வயது ஆண், பெண் ஊழியர்கள், ஜெயமங்கலம் 108 ஆம்புலன்ஸின் 36 வயது தொழில்நுட்பட உதவியாளர், பெரியகுளம் அரசு மருத்துவமனை குடியிருப்பு 35 வயது பெண் ஊழியர் பாதிக்கப்பட்டனர். தேவாரம் பழைய தபால் அலுவலக ரோடு 24 வயது வாலிபர், கம்பம் அரசு மருத்துவமனை 64 வயது ஊழியர், சுருளிப்பட்டி 48, 38 வயது பெண்கள் உட்பட மொத்தம் மாவட்டத்தில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X