சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் மூடல்: பழநி விவசாயிகள் பாதிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பழநி:பழநியில் மார்க்கெட் மூடப்பட்டதால், விளைந்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கும்நிலை உள்ளது.

கணக்கன்பட்டி, கோம்பைப் பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிட்டுள்ளனர்.தற்போது நன்கு விளைந்து பறிக்கும் நிலையில் அவை உள்ளன. வழக்கமாக அவற்றை பழநி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனை செய்வர். தற்போது ஊரடங்கு காரணமாக காய்கறிகளை வாகனங்களில் கொண்டு செல்ல வழியில்லை.

சிலநாட்களாக காய்கறி மார்க்கெட்டுகள் அனைத்தும் அடைக்கப் பட்டுள்ளன. அதனால் காய்கறிகளை விற்பனை செய்யமுடியவில்லை. காய்கறிகளை பறித்து தோட்டத்தில் வைத்தே விற்க முயன்றால், வியாபாரிகள் மலிவான விலைக்கு கேட்கின்றனர். இதனால் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடும் அவலம் நீடிப்பதாக விவசாயிகள் மனம்குமுறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X