சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தர்மலை சுமந்து நிற்கும் வரலாற்று சுவடுகள்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை:நிலக்கோட்டை அருகே 15ம் நுாற்றாண்டில் 2100 அடியில் உருவான மலைக்கோயிலுக்கு பக்தர்களால் படி அமைக்கப்பட்டு சுலபமாக செல்ல வழி ஏற்பட்டு உள்ளது.

எஸ்.மேட்டுப்பட்டி சித்தர் மலை 2100 அடி உயரத்தில் அடர் வனம் மற்றும் அதிக பாறைகளைக் கொண்டது. மலையின் தென்புறத்தில் 2ம் நூற்றாண்டில் சமணர்கள் தங்கியிருந்த குகைகள், படுகைகள், தீர்த்தங்கரர் என வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.மதுரையைச் சுற்றி சமணர்கள் வாழ்ந்த 7 மலைகளில் இரண்டில் மட்டும் பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டு உள்ளது.அவற்றுள் சித்தர்மலையும் ஒன்று.

மதுரையன், சித்திரையன், திண்டிலன் உட்பட 10 சமணர்களின் பெயர்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது. சித்தர்கள் இங்கு வாழ்ந்ததற்கு இம்மலைக்கும், வைகை ஆற்றுக்கு வடக்கே உள்ள சித்தர்கள்நத்தம் என்ற ஊரே சாட்சியாகும்.15ம் நுாற்றாண்டு கோயில் மலையின் வடபுறம் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தர் மகாலிங்கம் என்ற சிவாலயம் உள்ளது. லிங்கம் மேற்கு நோக்கி காட்சி தரும் 9 சிவாலயங்களுள் இதுவும் ஒன்று.

மத்திய வனம், தொல்லியல், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக் கோயிலுக்கு ஆடி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கரடுமுரடான பாதைகளில் சென்று வந்தனர். பாறைகளை கடந்து செல்ல சிறிய அளவிலான பாறையிலான படிகள் அமைக்கப் பட்டிருந்தன.

கோயில் நேர் எதிரே உள்ள மலையில் லிங்க வடிவிலான பாறை ஓவியம் வரையப்பட்டு உள்ளது.வற்றாத சுனைமூலிகைத் தன்மை கொண்ட வற்றாத நீராதாரமாக சுனை அமைந்துள்ள இம்மலையில் சித்தர் மகாலிங்கத்தை தரிசிக்கவும், சமணர் படுகையில் தியானம் செய்வதற்கும் நாள்தோறும் பக்தர்கள் வருகின்றனர்.

பல ஆண்டு போராட்டங்களுக்கு பின் கோயில் சீரமைப்புக் குழுவும், பக்தர்களும் இணைந்து மலையடிவாரத்திலிருந்து கோயில் வரை 1200 படிகளை அமைத்துள்ளனர். கோயிலின் பின்புறம் சுவையான நீர்நிரம்பிய சுனைக்கு மேலே கல்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.கோயில் சீரமைப்பு குழுவினர் கூறியதாவது: மூன்று துறைகளிலும் அனுமதி பெறுவதற்கே 2 ஆண்டுகள் ஆனது. பக்தர்களால் கோயில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இனி கோயில், வரலாற்று சுவடுகளை முழுமையாக பாதுகாப்போம். பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு தமிழக அரசு மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X