பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் மாறிய கொய்யா வியாபாரம் பேஸ்புக்கில் விற்கும் பட்டதாரி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பழநி:பழநி ஆயக்குடியில் இருந்து தினமும் ரூ.பல லட்சம் மதிப்பிலான கொய்யா வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பழநிக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்து வியாபாரமும் குறைந்துள்ளது

.இந்நிலையில் பட்டதாரி மகுடீஸ்வரன் 35, சமூக வலைத்தளமான 'பேஸ்புக்'கில் கொய்யா வியாபாரம் செய்து நிலைமையை சமாளிக்கிறார். இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் தோட்டத்தில் கொய்யா பயிரிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் தோட்டத்தை குத்தகைக்கு விட்டு விட்டு, அவரது விடுதியை கவனிப்பார்.

இந்தாண்டு கொரோனா பாதிப்பால் விடுதி மூடப்பட்டது. தோட்டத்தை குத்தகை எடுக்கவும் யாரும் வரவில்லை. அவரே தோட்டத்தை கவனிக்கிறார். இதனால் கொய்யாவை விற்க சிரமப்பட்டார். மாற்று யோசனையாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கொய்யா விற்று வருகிறார்.

அவர் கூறியதாவது: கொரோனாவால் வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் கொய்யா வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விற்பனையாகவில்லை. எங்களால் தினமும் ஒருபெட்டி அளவுக்கே கொய்யாவை கொண்டு சென்றோம். கிலோ ரூ.10 அளவுக்கே வியாபாரிகள் வாங்கினர். எனவே, கொய்யா ரூ.20 என்ற விலைக்கு பேஸ்புக்கில் பதிவிட்டேன். தற்போது பலரும் வந்து வாங்குவதால் கூடுதலாக விற்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X