சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வு காலத்தில்வடமதுரையில் பரிதவிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வடமதுரை:வடமதுரையில் தொடர்ச்சியாக 11 நாட்கள் முழு நேரமும் கடைகள் அடைக்கும் முடிவு பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பிரச்னையால் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஜூலை 15 வரை அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள், காய்கறி கடைகள் தினமும் கிடைத்தன.வடமதுரையில் ஜூன் 3 வது வாரத்தில் வியாபார நேரத்தை குறைத்தனர். தற்போது ஜூலை 16 முதல் 26 வரை தொடர்ந்து 11 நாட்கள் முழு நேர அடைப்பு செய்துள்ளனர். இதனால் பேக்கரி, பழம், மளிகை, காய்கறி வியாபாரிகள் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

பொதுமக்களுக்கும் அரசு தளர்வு வழங்கிய நேரத்தில் முக்கிய பொருட்கள், சேவைகள் கிடைக்காமல் திண்டுக்கல், அய்யலுார் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.அதிருப்தியான வியாபாரிகள் அரசு துறை அதிகாரிகளை சந்தித்து, 'முழு நேர கடையடைப்பிற்கு பதிலாக நேர குறைப்பு செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

அதிகாரிகளோ, 'வடமதுரை வியாபாரிகளின் முடிவு குறித்து, தலைமை செயலகத்துக்கு அனுப்பபட்டுள்ளது. இதனால் இம்முறை மட்டும் எடுத்த முடிவின்படி முழுஅடைப்பை தொடருங்கள்' என கேட்டு கொண்டனர். இதனால், வியாபாரிகள் கடை திறக்கும் முடிவை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X