பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை : தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காணமாக, நேற்று தமிழகம் முழுதும், போக்குவரத்து முடங்கி, கடைகள் மூடப்பட்டு, வெறிச்சோடி காணப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று(ஜூலை 20) முதல் அமலுக்கு வருகிறது.



latest tamil news


தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளையும், அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், எவ்வித தளர்வுகளும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி, மாநிலம் முழுதும் நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது; கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வாகனங்களின் போக்குவரத்தும் முடங்கியதால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.அரசு உத்தரவை மதித்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி, முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.


latest tamil news


இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய, வழக்கமான ஊரடங்கு, அமலுக்கு வருகிறது. இன்று முதல் கடைகள் திறக்கப்படும்; அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்படும்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
20-ஜூலை-202016:19:33 IST Report Abuse
Gopinathan S வழக்கமான ஊரடங்கு, அமலுக்கு வருகிறது. இன்று முதல் கடைகள் திறக்கப்படும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்படும்.-ஊரடங்கு என்ற வார்த்தைக்கு இருந்த மரியாதை போச்சு இவங்களால...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
20-ஜூலை-202015:14:20 IST Report Abuse
Rengaraj பொது ஊரடங்கு,தனி ஊரடங்கு, ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு, கொஞ்சம் மட்டும் தளர்வு, என்று மாற்றி மாற்றி சொல்வதால் மக்கள் குழம்பிஇருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகது. முதல்வர் ஒரு அறிக்கை விடுகிறார். மாவட்ட ஆட்சியர் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். இரண்டுமே தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. அதையும் படம் எடுத்து சமூக ஊடங்களிலும் பரப்பப்படுகிறது. அந்த அந்த மாவட்ட ஆட்சியர் கையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மொத்தமாக தந்துவிடவேண்டியதுதானே? மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பு. பொருளாதாரம் சார்ந்த முடிவுகளை அவர் எடுப்பதில் தவறே இல்லை. சுதந்திரமாக அவர் முடிவில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் கொரோனா கட்டுக்குள் வரும். ஊரடங்கும் முடிவுக்கு வரும். மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். இங்கே மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், என்று ஒரு பெரும்படையின் பின்னே செல்வதால் மாவட்ட நிர்வாகம் பெரும்பான்மையான நேரங்களில் தடுமாறுகிறது. கொரோனா அதிகரிப்பதன் காரணமும் இந்த தடுமாற்றத்தின் பின்னணிதான்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-ஜூலை-202014:38:17 IST Report Abuse
S. Narayanan கொரோனாவினால் உடல் மிகவும் ""தளர்ந்து"" போய்விட்டது. இனி தளர்வு கொடுத்து என்ன பயன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X