பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு மாவட்டங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



latest tamil news



சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம், பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில், மிதமான மழை பெய்யும்.


latest tamil news



அதிகபட்சமாக, 32 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, காங்கேயம், 10; அரவக்குறிச்சி, 8; வால்பாறை, ஊட்டி, 7; வெள்ளக்கோவில், சென்னை அண்ணா பல்கலை, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில், வரும், 22ம் தேதி வரை; தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், வரும், 23ம் தேதி வரை, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X