சச்சின் பைலட் தொடர்பில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் காங்., ஆட்சிக்கு எதிராக அக்கட்சியிலேயே போர்க்கொடி எழுப்பி உள்ளவர் சச்சின் பைலட். இளைஞரான பைலட், காங்கிரசில் பிரபலமானவர். கடுமையான உழைப்பாளி. அனைத்து மாநில, காங்., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, பலரும் இவருடன் தொடர்பு வைத்துள்ளனர். இளைஞர் காங்கிரசை சேர்ந்த அனைவருக்கும் இவர் மீது மரியாதை.



latest tamil news



தமிழகத்தைச் சேர்ந்த காங்., - எம்.பி.,க் கள் இருவர், சச்சினிடம் அடிக்கடி பேசி வருகின்றனர். இளைஞர் காங்கிரசில் இருந்த போது, சச்சினிடம் அதிக நெருக்கமாக இருந்தவர்கள், இவர்கள். 'நீங்கள் காங்கிரசை விட்டு போகக் கூடாது; பேசிப் பார்க்கலாம். எக்காரணம் கொண்டும் பா.ஜ., பக்கம் போய்விட வேண்டாம்' என, சச்சினிடம் இவர்கள், சொன்னார்களாம்.


latest tamil news


மாநில காங்., தலைவர் பதவியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள சச்சின் மீது, ராஜஸ்தான் போலீசும் கடும் நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. 'பா.ஜ.,விடம் போக மாட்டேன். ஆனால், கட்சிக்காக கடுமையாக உழைத்த எனக்கு கிடைத்த பரிசு இதுதான்' என விரக்தியாக பதில் சொன்னாராம், சச்சின். 'நீங்கள் அதிகம் என்னிடம் பேச வேண்டாம். இதனால் உங்களுக்கு தான் பிரச்னை வரும்' என்றும், கறாராக சொல்லிவிட்டாராம், சச்சின்.

இந்த இரண்டு எம்.பி.,க்களில் ஒருவர், பிரதமரை மரியாதையில்லாமல் விமர்சித்தவர்; இன்னொருவர் தென் தமிழகத்தைச் சேர்ந்த மணியானவர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
21-ஜூலை-202020:15:37 IST Report Abuse
mathimandhiri இப்போது பைலட்டை தங்கள் யாருக்கும் போட்டியாக வர விடாமல் சூப்பராக இத்தாலி குடும்பம் ஓரங்கட்டி விட்டது. இனி கட்சிக்குள் வந்தாலும் இதுவே தொடரும். பழைய மரியாதை எல்லாம் கூட இருக்காது. தேர்தல் வெற்றிக்குப் பயன் படுத்தியாகி விட்டது.பப்பு மூஞ்சிக்கா வோட்டு விழுந்தது?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
21-ஜூலை-202020:06:57 IST Report Abuse
mathimandhiri இந்தப் பைலட்ட்டிடம் இத்தாலி கும்பலும் ஜாலராக்களும் வீட்டுக் கொடுக்காமல் இன்னும் இவ்வளவு வீராப்பா இருப்பதற்குக் காரணம் யாருக்கும் தெரியலையே? பிஜேபிக்கு அவர் செல்வது ரிமோட்சான்ஸ் தான். சிந்தியா அளவுக்கு காங்கிரசை ஒரு கலக்கு கலக்கலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் பரிதாபம் அவரால் அரைக் கிணறு மட்டுமே தாண்ட முடிந்தது. எதிர்பார்த்த படி நடக்க வில்லை. அவரது ரிமோட் கண்ட்ரோல் மாமனார், மற்றும் மச்சான் ஆகிய காஷ்மீரத்து அப்துல்லாக்கள் கிட்ட அல்லவா இருக்கிறது? அவர்கள் இத்தாலிக்கு பரம தோஸ்த் ஆயிற்றே? பைலட் வண்டிய இப்போ பிரேக் போட்டு நிறுத்தி விட்டார்கள். பாவம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202017:47:53 IST Report Abuse
J.V. Iyer குப்பையில் வைரம் இந்த சச்சின் பைலட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X