இறந்தும் உதவும் அருண் ஜெட்லி!

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

புதுடில்லி: பா.ஜ.,வின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி மறைந்து, ஓராண்டு முடியப்போகிறது. இவரது முதல் ஆண்டு நினைவு அஞ்சலியை, வித்தியாசமாக அனுசரிக்க, ஜெட்லியின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.



latest tamil news


ஜெட்லி மறைந்த பின், அவருடைய மருத்துவ செலவு உட்பட பல செலவுகளுக்கு, ராஜ்ய சபாவிலிருந்து பணம் கிடைத்தது. இது ஒரு பெரிய தொகை. இந்த பணத்தை, பிக்ஸட் டிபாசிட்டில் வங்கியில் வைத்து, அதிலிருந்து வரும் வட்டித் தொகையை, நல்ல விஷயங்களுக்கு செலவிட, ஒரு, 'டிரஸ்ட்' அமைக்கப்பட உள்ளதாம்.

ராஜ்ய சபா எம்.பி.,யாகவும், பா.ஜ., அவைத் தலைவராகவும், 25 ஆண்டுகள் பணியாற்றியவர், ஜெட்லி. எனவே, ராஜ்ய சபாவில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் படிப்பு செலவுகளுக்கு பணம் கிடைக்க வழி செய்துள்ளனர், ஜெட்லி குடும்பத்தினர்.


latest tamil news


ராஜ்ய சபாவில் கடைநிலை ஊழியர் ஒருவர் மற்றும் அடுத்த ரேங்கில் இருக்கும் ஊழியர் ஒருவர் என, இருவர் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்பட உள்ளது. ராஜ்ய சபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், பிரதமரும் கலந்து கொள்வாராம்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
25-ஜூலை-202002:49:25 IST Report Abuse
தமிழ் வேந்தன் போபால் மக்களுக்கு கொடுத்து சாபத்தை தணிக்கலாம்
Rate this:
Cancel
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
20-ஜூலை-202021:52:39 IST Report Abuse
Venkataraman Sekkar Jaitley செய்த மிகப்பெரிய உதவி சிதம்பரத்தைக் காப்பாற்றினது. Jaitley உதவாது இருந்திருந்தால் போனதடவையே சிதம்பரம் ஜெயிலுக்கு போயிருப்பார்.
Rate this:
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
01-ஆக-202001:28:27 IST Report Abuse
தமிழ் வேந்தன்ஜெட்லீ உதவியதால் ஆண்டர்சனும் ஜெயிலுக்கு போகல...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
20-ஜூலை-202015:52:47 IST Report Abuse
venkatan வாழ்க அறம் வளர்க அற ச் சிந்தனைவெல்க மானுடம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X