இந்தாண்டு 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ட் தலைவர்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Microsoft President, coronavirus, covid 19, Microsoft President brad smith,  மைக்ரோசாப்ட், தலைவர், வேலையிழப்பு

வாஷிங்டன்: கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதாரத்தின் காரணமாக 25 கோடி பேர் வேலையிழப்பார்கள் என மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகளில் கடந்த சில மாதங்களாக தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் செயல்படாமல் கிடக்கின்றன. வீட்டில் இருந்து வேலை பார்க்க கூடிய துறைகளில் கூட பலர் பணி நீக்கம், சம்பளம் பிடித்தம் என தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகள் இன்னும் தீவிரமாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பிராட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2020ம் ஆண்டுக்குள் அதிர்ச்சியூட்டும் வகையில் 25 கோடி பேர் வேலையிழப்பார்கள். அமெரிக்காவில் மட்டுமே 3.5 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உயர இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 2.1 கோடி பேர் வேலையிழக்கவுள்ளார்கள். இதேபோன்ற சவால்களை பல நாடுகளும் எதிர்கொள்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரகு -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-202016:59:53 IST Report Abuse
ரகு ஆக மொத்தம் மைக்ரோசாப்டுல பெரிய லேஆப் இருக்குன்னு ஹின்ட் குடுக்குறாரு. புரியுது புரியுது.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
20-ஜூலை-202015:34:06 IST Report Abuse
Raj சீனாக்கு என்ன தண்டனை?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-ஜூலை-202014:09:34 IST Report Abuse
S. Narayanan இனி பயந்தால் எதையும் சாதிக்க முடியாது. வருவதை எதிர்கொள்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X