பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 9ல் கந்த சஷ்டி கவசம் பாட கவுமார மடாலயம் அழைப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
கந்த_சஷ்டி_கவசம், பாட, கவுமார_மடாலயம், அழைப்பு, ஆகஸ்ட்9

கோவை: 'முருகப்பெருமானை இழிவுபடுத்திய, கருப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 9, மாலை, 6:00 மணிக்கு, வீதிகளில், ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்' என, கோவை, சிரவணபுரம், கவுமார மடாலய மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் அடையாளம் கோபுரங்களும், கோவில்களும் தான். தமிழ் மண்ணின் அடையாளம், நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த தமிழும் ஆன்மிகமே. கடந்த, 80 ஆண்டுகளாக தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் திராவிடம் என்ற போர்வையில், இழிவுபடுத்தி வருகின்றனர். விநாயகர், ஆண்டாள், கிருஷ்ணரை தொடர்ந்து, தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தியுள்ளனர். கருப்பர் கூட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்தும், நம் கலாசாரம், பண்பாட்டை காக்கும் வகையிலும், ஆகஸ்ட் 9, மாலை, 6:00 மணிக்கு, சமூக இடைவெளியில் நின்று, கந்த சஷ்டி கவசத்தை, ஒன்று கூடி பாடுவோம்.


latest tamil news


இறை நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் வசிக்கும் வீதிகளில், சமூக நல்லிணக்கத்துடன், பங்கேற்போம். முருகப்பெருமானின் வேலை வணங்கி பூஜை செய்வோம். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும், தொலைபேசியில் பேசும்போதும், வணக்கம் என்ற வார்த்தைக்கு பதில், 'வெற்றிவேல் வீரவேல்' என்று அழைப்போம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
20-ஜூலை-202018:28:32 IST Report Abuse
த.இராஜகுமார் தமிழர் கோவிலுக்குள் உங்களுக்கு என்ன வேலை
Rate this:
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
20-ஜூலை-202016:28:59 IST Report Abuse
praj எப்படியோ சாத்தான்குளம் பிரச்சனை யாரும் பேசவில்லை...தமிழா சங்கிகளின் சதி தெரியாமல் நீ சத்தம் போடுகிறாய்..
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
20-ஜூலை-202018:29:05 IST Report Abuse
Nellai Raviamam. moola pathiram enna aachu ?...
Rate this:
Jayvee - chennai,இந்தியா
21-ஜூலை-202013:50:54 IST Report Abuse
Jayveesaathankula saathangal yaro oruvarin videovai vaithu miratti panam sambaathithaaga seithi.. yesappa sariyaana thandanai koudtheer.....
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
20-ஜூலை-202016:12:36 IST Report Abuse
Vivekanandan Mahalingam எல்லா கோவில்களிலும் காலையும் மாலையும் ஒலி பெருக்கியில் கந்த சஷ்டி கவசம் பாடலை வைக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X