பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் ரூ.15 கோடி புத்தக வர்த்தகம் பாதிப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
book sales, coronavirus, covid 19, தமிழகம், புத்தகம், வர்த்தகம், பாதிப்பு, ரூ_15கோடி, கொரோனா, ஊரடங்கு

மதுரை: கொரோனா ஊரடங்கால் நான்கு மாதங்களில் தமிழக அளவில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தக விற்பனை பாதித்துள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தினர் (பபாசி) தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சியில் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்றது. 10 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினர். நெல்லையில் நடந்த கண்காட்சியிலும் பல கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. கொரோனா தாக்கம் நீடிப்பதால் அடுத்து நெய்வேலி, கோவை, ஈரோடு, மதுரையில் கண்காட்சி நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

பபாசி தலைவர் சண்முகம் கூறியதாவது: ஆண்டுதோறும் செப்டம்பரில் மதுரை கண்காட்சியில் பல கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கும். இம்முறை கண்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்தில் கட்டுமான பணி நடப்பது மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளால் நடப்பது சந்தேகம்.


latest tamil news


ஊரடங்கால் பதிப்பாளர்கள் சொந்த ஊர் சென்ற நிலையில் புத்தக கடைகள் திறந்திருந்தாலும் வாழ்வாதார பிரச்னையில் தவிக்கும் மக்கள் புத்தகம் வாங்குவது சாத்தியமில்லை. இதனால் நான்கு மாதங்களில் கண்காட்சி தவிர வழக்கமான புத்தக வர்த்தகம் ரூ.15 கோடிக்கு பாதித்துள்ளது. மாவட்ட நுாலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பி விட்டோம். ஆனால், இதுவரை 50 சதவீதம் பணம் தான் வந்துள்ளது. தொழில் முடங்கிய வேளையில் மீதமுள்ள 50 சதவீத பணத்தை அரசு வழங்கினால் ஓரளவு பொருளாதார பிரச்னை தீரும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X