பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே இன்ஜினியருக்கு கொரோனா; தொழிலாளர் பீதி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட்டில், டிவிசனல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக, 35 வயது ஆண், சமீபத்தில் பொறுப்பேற்றார். ஈரோடு ரயில்வே மருத்துவமனை பின்புறம், அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த, 16ல் சென்னையில் இருந்து, வீட்டு உபயோக பொருட்களை லாரியில் எடுத்து வந்தார். அவருடன் குடும்பத்தினர் வரவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில், அவருக்கு பி.சி.ஆர்., சோதனை செய்ததில், 18ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. சளி பரிசோதனைக்கு பிறகு, தனிமைப்படுத்திக் கொள்ளாமல், இரண்டு நாட்கள் பணிக்கு சென்றுள்ளார். மேலும், அவரது வீட்டை சுத்தம் செய்யும் பணியில், 10 ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில், தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட்டில் பணியாற்றும், 700 தொழிலாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X