பொது செய்தி

தமிழ்நாடு

உயர்த்தி வழங்கப்படும் வீட்டு வரி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஈரோடு: முன்னாள் படைவீரர்களுக்கு, வீட்டு வரி உயர்த்தி வழங்கப்படுகிறது, என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து, வீட்டு வரியை மீளப்பெறும் தொகையை, உயர்த்தி வழங்க ஆணை பெறப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த போர் விதவையர், குடும்ப ஓய்வூதியர் பெறும் முன்னாள் படைவீரர்களின் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர்கள், வீரதீர செயல்களுக்கான விருது பெற்ற முன்னாள் படைவீரர்கள், தாங்கள் செலுத்திய வீட்டு வரியை, 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகபட்சமாக மீளப்பெறலாம். ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஜவான்ஸ் பவனில் இயங்கும், மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X