பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.40: கூவிக்கூவி விற்ற விவசாயிகள்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம்: ஊரடங்கால், ஒரு கிலோ மல்லிகை பூ, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், மல்லி, முல்லை மற்றும் சம்பங்கி பூக்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கால் பூக்களின் விலை குறைந்து விட்டது. ஊரடங்கால் சத்தி பூ மார்க்கெட்டுக்கு, நேற்று விடுமுறை விடப்பட்டது. இதனால் மல்லிகை பூ ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு, கூவிக்கூவி இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் விற்பனை செய்தனர். ஊரடங்குக்கு முன், மல்லிகை பூ ஒரு கிலோ, 500 முதல், 1,200 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது கிடைக்கும் விலை, பறிக்கும் செலவுக்கு கூட ஆகாது என்று, விவசாயிகள் புலம்புகின்றனர். பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து சேவை இல்லாததால், வெளியிடங்களுக்கு பூக்கள் கொண்டு செல்ல முடியாததால், விலை குறைந்துள்ளது. அதேசமயம் வெயில் காலத்தில் விளைச்சல் அதிகம் என்பதால், விலை குறைந்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X