பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கால் வெறிச்; வெளி நாட்டவரால் பரபரப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் ஈரோடு மாநகர், மாவட்டத்தில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு, வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின. மாநில, மாவட்ட எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக, அரசு பஸ் நேற்று மதியம் வந்தது. பஸ்சை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். வெளிநாட்டில் இருந்து வந்த இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும், ஈரோடு, குமலன் குட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. இருவரையும் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரிக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கத்தார் நாட்டில் பணிபுரியும், தமிழகத்தை சேர்ந்த, 35 பேர், விமானத்தில் சென்னைக்கு வந்தனர். இவர்கள் அரசு பஸ்களில் ஏற்றி, அவரவர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி ஈரோடு, குமலன்குட்டையை சேர்ந்த இருவருடன், பஸ் வந்துள்ளது. அவர்களை அறிவுறுத்தி, பிசிஆர் பரிசோதனைக்காக, பெருந்துறை அனுப்பி வைத்தோம். பஸ்சில் திருப்பூர், கோவையை சேர்ந்தவர்கள் இருந்தனர். மாநகருக்குள் செல்லக்கூடாது என அறிவுறுத்தி, தேசிய நெடுஞ்சாலை வழியே செல்ல டிரைவருக்கு அறிவுறுத்தினோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

விதிமீறியதால் அபராதம்: முழு ஊரடங்கால், கோபி கரட்டூர், டவுன் சிக்னல், காலேஜ் பிரிவு ஆகிய இடங்களில், போலீசார் பேரிகார்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். டூவீலர் மற்றும் கார்களில் வந்தவர்களை மடக்கி விசாரித்து அனுப்பினர். கோபியில், கரட்டூர் நுழைவு வாயிலை கடந்து, அதிவேகமாக ராயல் என்பீல்டு பைக்கில் பயணித்த அப்துல் ரகுமான், 25, என்பவருக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். வாகனங்களை மடக்கி விசாரித்ததில், பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த காரணங்களையே தெரிவித்தனர். ஊரடங்கால் கோபி அம்மா உணவகத்தில், கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X