பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கொரோனா பாதிப்பு 477 ஆனது: தாளவாடி அருகே 422 வீடுகள் தனிமை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, 477 ஆக உயர்ந்தது. அதேசமயம் சிறுவனுக்கு தொற்றால், தாளவாடி அருகே, 400க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.


ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 473 ஆக இருந்தது. ஈரோடு மாநகராட்சியில் மூன்று பேர், சித்தோடு எலவமலையில் ஒருவர் என, நான்கு பேருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால், 477 ஆக எண்ணிக்கை உயர்ந்தது. இதுவரை, 297 பேர் குணமடைந்து திரும்பியுள்ள நிலையில், 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


422 வீடுகள் தனிமை: தாளவாடி அருகே சூசையபுரத்தை சேர்ந்த, 13 வயது சிறுவனுக்கு, நேற்று முன்தினம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வைரஸ் பரவாமல் தடுக்க, தொடர்பில் இருந்தவர்கள் வீடுகள் மற்றும் ஐந்து வீதிகளை சுற்றியுள்ள பகுதிகளில், 422 வீடுகளை, சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 38 பேரிடம் சளி மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X