சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி தீக்குளித்ததால் அச்சம்: போதை கணவன் ஜி.ஹெச்.,ல் தற்கொலை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஈரோடு: மனைவி தீக்குளித்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில், பயந்து போன கணவன், மருத்துவமனை வளாகத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கவுந்தப்பாடி அருகே, கூத்தாடிபாளையத்தை சேர்ந்தவர் பூபதி, 33, கூலி தொழிலாளி, இவரின் மனைவி கார்த்திகா, 21; திருமணமாகி மூன்றரை ஆண்டாகிறது. குழந்தை இல்லை. பூபதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் மனமுடைந்த கார்த்திகா, நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், 60 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் இருந்த பூபதிக்கு, காலையில்தான் விபரம் தெரிந்தது. இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை பெறும் மனைவியை பார்த்தார். பின்னர், வார்டு கழிவறைக்கு சென்ற பூபதி, சேலையால் தூக்கிட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து இதையறிந்த மருத்துவ ஊழியர்கள், பூபதியை இறக்கி சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். வென்டிலேட்டர் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் இறந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X