உணவு கேட்டு தனிமைவாசிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு கேட்டு 'தனிமை'வாசிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2020
Share

இடைப்பாடி: உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி, கேட்டுக்கடையைச் சேர்ந்த, 10 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதால், அப்பகுதி தடை செய்யப்பட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி யில், நேற்று முன்தினம், 295 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அருகில் உள்ள வீட்டினர் என, மூன்று குழந்தை உள்பட, 25 பேர், மொரசப்பட்டியில் உள்ள, அமலா மெட்ரிக் பள்ளியில், நேற்று முன்தினம், தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு, டீ, காபி தராததோடு, குறைந்தளவே உணவு வழங்கப்படுகிறது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக்கூறி, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி தாசில்தார் கோவிந்தராஜன், நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், சுகாதார அலுவலர் செந்தில்குமார், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிக்க டீ கொடுத்து, சோப்பு, சானிடைசர், முகக்கவசம் வழங்கினர். அத்துடன், தேவையான அளவு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரப்படும் என, உறுதி யளித்தனர். இதனால், தனிமைப்படுத்தப்பட்டோர், அவரவர் அறைக்கு சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X