பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கிலும் முழுவீச்சில் இரட்டை மேம்பால கட்டுமான பணி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வீரபாண்டி: முழு ஊரடங்கிலும், அரியானூர் இரட்டை மேம்பால கட்டுமானப்பணி முழுவீச்சில் நடந்தது.


சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, விபத்தை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 45 கோடி ரூபாய் மதிப்பில், இரட்டை மேம்பால கட்டுமானப்பணி, கடந்த ஆண்டு தொடங்கியது. 750 மீட்டர் நீளத்தில், தலா, 17 மீட்டர் அகலத்தில், இரு மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. நான்கு வழிச்சாலை நடுவே, பாலத்துக்கு ஐந்து வீதம், 10 தூண் அமைத்து அதன் மேல், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனிடையே, கடந்த மார்ச் முதல் ஊரடங்கால், கட்டுமானப்பணி, 40 நாளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த மே, 1 முதல், ஊரடங்கில் சில தளர்வு அறிவிக்கப்பட்டு, மேம்பாலம் கட்டுமானப்பணி, மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்ட பணியில், தற்போது தூண், பால நடுப்பகுதி கான்கிரீட் தளம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இம்மாதத்தில், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், பெரிய கட்டுமான பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் ஞாயிறான நேற்றும், கிரேன் இயந்திர உதவியுடன், தொழிலாளர்கள் பாலத்தின் தடுப்புச்சுவர்களை அமைக்கும் பணியில், சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். இப்பாலம், கந்தம்பட்டி பாலப்பணிகள், ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், கந்தம்பட்டி பாலப்பணி நிறைவடைந்து, கடந்த வாரம், முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனால், அரியானூர் மேம்பால பணியை விரைவில் முடிக்க, முழு ஊரடங்கிலும், முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X