பொது செய்தி

தமிழ்நாடு

23 பேருக்கு தொற்று உறுதி: கேட்டுக்கடை மக்கள் கலக்கம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

இடைப்பாடி: கேட்டுக்கடையில், நேற்று, 23 பேருக்கு தொற்று உறுதியானதால், அப்பகுதி மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.


இடைப்பாடி, கேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர், 30 வயது ஆண். லாரி டிரைவரான இவர், சமீபத்தில் மஹாராஷ்டிரா சென்றுவிட்டு, சொந்த ஊர் திரும்பினார். அவருக்கும், குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்ததில், கடந்த, 15ல், டிரைவரின் மனைவியும், 23 வயது கர்ப்பணியான, தையல் தொழிலாளிக்கு தொற்று உறுதியானது. அவர், மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாகவும் இருந்ததால், அவர் வீட்டுக்கு, மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், 17ல், அப்பெண்ணின் குடும்பத்தினர் மூன்று பேர், அருகில் உள்ள ஆறு பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அப்பகுதியில் முகாமிட்ட சுகாதாரத்துறையினர், நேற்று முன்தினம், 295 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதில், கேட்டுக்கடையில் உள்ள, 3, 11 வயது பெண் குழந்தைகள், 11 பெண்கள் உள்பட, 20 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள், சேலம் அரசு மருத்துவமனை, கருப்பூர் பொறியியல் கல்லூரி சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், கர்ப்பிணியின், 10, 13, 14 வயது தம்பிகள் மூவருக்கும் உறுதியாகி, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கேட்டுக்கடை மக்கள் கலக்கம் அடைய, அனைவருக்கும், பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, இடைப்பாடி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 38 வயது ஆண், 42 வயது விசைத்தறி தொழிலாளி, 55 வயது பெண் உள்ளிட்ட மூவருக்கும், தொற்று இருப்பது நேற்று உறுதியாகி, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

சங்ககிரியில் 3 பேர்: சங்ககிரி, சுப்புக்கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த, 32 வயதுடையவர் ரிக் வண்டி வேலையாக, ஆந்திரா சென்றுவிட்டு, மூன்று நாளுக்கு முன், சொந்த ஊர் திரும்பினார். காய்ச்சல் இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டார். அதில், கொரோனா இருப்பது, நேற்று உறுதியானது. வி.என்.பாளையத்தை சேர்ந்த, 27 வயதுடைய ஆண், சங்ககிரி, புது இடைப்பாடி சாலையிலுள்ள பேக்கரிக்கு அடிக்கடி சென்றுவந்தார். அந்த கடை உரிமையாளர், காசாளர், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பரிசோதித்ததில் நேற்று தொற்று உறுதியானது. இருகாலூர், ஊத்துப்பாளையத்தைச் சேர்ந்த, 25 வயதுடைய ஆண், அதே பகுதியில், தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தார். இதனால், இவருக்கும் காய்ச்சல் ஏற்பட, பரிசோதித்ததில் தொற்று உறுதியானது. மூவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X