பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு 2 மூதாட்டி பலி; இறப்பு 23 ஆக அதிகரிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சேலம்: கொரோனாவுக்கு இரு மூதாட்டி பலியான தால், சேலம் மாவட்டத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை, 23 ஆக அதிகரித்துள்ளது.


சேலம், செவ்வாய்ப்பேட்டை, பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர், 65 வயது மூதாட்டி. நீரிழிவு நோயாளியான இவருக்கு, காய்ச்சல் அதிகமாக, கடந்த, 11ல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா கண்டறியப்பட்டு, தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று மதியம், 1:30 மணிக்கு இறந்துவிட்டார். அவரது மகனும், தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உள்ளார். சேலம், குமாரசாமிபட்டி, ராம் நகரைச் சேர்ந்தவர், 62 வயது மூதாட்டி. இவருக்கு, உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல் அதிகமாகி, கடந்த, 15 இரவு, 7:15 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை, 3:15 மணிக்கு இறந்துவிட்டார். இவருடன் சேர்த்து, கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 23 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X