பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தடுப்பு பணி ஊழியருக்கு 'வைரஸ்'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

மகுடஞ்சாவடி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவருக்கு, 'வைரஸ்' தொற்று உறுதியானது. இளம்பிள்ளை, தப்பக்குட்டை, சின்னமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர், 21 வயதுடைய ஆண். திருமணம் ஆகாத இவர், கீரபாப்பாம்பாடி ஊராட்சியில், கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு, நேற்று முன்தினம், கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால், பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது நேற்று உறுதியாகி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் வீட்டிலுள்ள தாய், தந்தை, சகோதரிக்கு பரிசோதனை செய்து, அ.புதூர் அரசு மாதிரி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.


வியாபாரி மகள்: இளம்பிள்ளை, காடையாம்பட்டியில், 68 வயது முதியவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். அவருக்கு, இதய பாதிப்பு உள்ள நிலையில், கடந்த, 16ல், சேலம், அம்மாபேட்டையிலுள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு, 17ல், கோவை, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானதால், நேற்று, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டதில், அவரது, 41 வயது மகளுக்கு தொற்று உறுதியாகி, கொண்டலாம்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கணவர், மகன், மகள், அ.புதூர் அரசு மாதிரி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X