பொது செய்தி

தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகைக்கு செம்மறி ஆடு வாங்கி குவிப்பால் கறி விலை உயர்வு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சேலம்: பக்ரீத் பண்டிகை கொண்டாட, பிரியாணிக்காக செம்மறி ஆடுகளை வாங்கி குவிப்பதால், அதன் கறி விலை உயர்ந்துள்ளது.


தமிழகத்தில், செம்மறி ஆடுகளை விட, வெள்ளாடுகளின் விலை உயர்வாக இருப்பது வழக்கம். ஆக., 1ல், பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. குர்பானி கொடுக்க, இஸ்லாமிய தொழிலதிபர் பலர், செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர். பிரியாணி ருசிக்கு, பக்ரீத் பண்டிகையின்போது, அதிகளவில் செம்மறி ஆடு பயன்படுத்தப்படுகிறது. இதனால், வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள், வெள்ளாடுகளின் கொள்முதலை நிறுத்தி விட்டு, செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், வெள்ளாடுகளை விட, செம்மறி ஆடுகளின் விலை, 500 முதல், 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெள்ளாடு கறி கிலோ, 680 முதல், 800 ரூபாய் வரை விற்ற நிலையில், செம்மறி ஆட்டுக்கறி கிலோ, 580 முதல், 700 ரூபாய் வரை விற்றது. பக்ரீத் நெருங்கும் நிலையில், செம்மறி ஆட்டுக்கு வரவேற்பால், அதன் விலை, நேற்று கிலோவுக்கு, 120 ரூபாய் வரை உயர்ந்தது. சேலம் உள்பட, தமிழக முக்கிய நகரங்களில், செம்மறி ஆட்டுக்கறி கிலோ, 700 முதல், 800 ரூபாய் வரை விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X