பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்குரிய 8 மரங்கள் வெட்டி சாய்ப்பு: வேலி அமைக்காததால் நேர்ந்ததாக புகார்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: கோவில் நிலத்தில் இருந்த எட்டு மரங்கள் வெட்டப்பட்டதற்கு, வேலி அமைக்காததே காரணம் என, ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.


திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், நேற்று, இ-மெயில் மூலம், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சேலம் கலெக்டர், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பிய மனு: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. அதற்கு சொந்தமாக, 9.20 ஏக்கர் நிலம் உள்ளது. 2014 அக்., 23ல், கோவில் நிலத்தை அளந்து, வேலி அமைக்க, சென்னை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, 2020 பிப்., 29ல், நிலம் அளந்து, அத்து காட்டப்பட்டது. அப்போதே வேலி அமைத்திருக்க வேண்டும். நான்கு மாதமாகியும் அமைக்கவில்லை. இந்நிலையில், ஜூலை, 19ல்(நேற்று), கோவில் நிலத்தில் இருந்த, பயன்தரக்கூடிய தென்னை மரங்கள் எட்டை, வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். ஆணையரின் அறிவுறுத்தல்படி, வேலி அமைத்திருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது. மரம் வெட்டியவர், வேலி அமைக்க காலம் தாழ்த்திய, சேலம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அத்துமீறி மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க, மல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X