பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய சிறை கைதிகள் தயாரித்த 48 'பேரிகார்டு': சேலம், கோவை, திருப்பூர் போலீசுக்கு வினியோகம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சேலம்: கைதிகள் மூலம், 'பேரிகார்டு' தயாரித்து, சேலம் மாநகர், மாவட்டம், திருப்பூர், கோவை போலீசாருக்கு, தலா, 12 வீதம், 48 பேரிகார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.


சேலம் மத்திய சிறைக்குள், வெல்டிங் பட்டறை, சேர் உள்ளிட்ட பொருள் தயாரிப்பு கூடம், கைத்தறி கூடம், உணவகம், சலவையகம், பொருட்கள் விற்பனை செய்யும் கேன்டீன், பேக்கரி தொடங்கி, கைதிகள் மூலம் நடத்தப்படுகின்றன. கைதிகளின் வருவாயை பெருக்க, அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்தும் பொருட்களுக்கு, 'ஆர்டர்' பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக போலீசார், கூட்டத்தை ஒழுங்குபடுத்தல், போக்குவரத்தை சரிசெய்ய பயன்படுத்தும், பேரிகார்டுகளை தயாரித்து வழங்க, போலீஸ் டி.ஜி.பி., திரிபாதி, சேலம் சிறை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். அதனால், முதல்கட்டமாக, 50 பேரிகார்டு தயாரித்து, சேலம் மாநகர், மாவட்டம், திருப்பூர், கோவை போலீசாருக்கு, தலா, 12 வீதம், 48 பேரிகார்டுகள் நேற்று வினியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் கூறியதாவது: சிறையில், கடுங்காவல் தண்டனை பெற்று அடைக்கப்படும் கைதிகள், வேலை செய்ய வேண்டும் என்பது விதி. அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப, சிறை நிர்வாகம் சார்பில் சம்பளம் வழங்கப்படுகிறது. நன்றாக வேலை செய்வோருக்கு, தினம், 200 ரூபாய், சாதாரணமாக வேலை செய்வோருக்கு, 160 ரூபாய், வேலை பழகுவோருக்கு, 120 ரூபாய் வீதம் கூலி வழங்கப்படும். ஏற்கனவே, சிறையில் கைதிக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன. இதில், வெல்டிங் பட்டறை, சேர் தயாரிப்பு கூடத்தில், தற்போது முதல் கட்டமாக, 48 பேரிகார்டுக்கு, 8.25 லட்சம் ரூபாய்க்கு, போலீஸ் சார்பில், 'ஆர்டர்' வந்தது. அதற்கு, கேரளா போலீசார் பயன்படுத்தும் பேரிகார்டு மாடலில் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X