பொது செய்தி

தமிழ்நாடு

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சேலம்: மின் கட்டண பிரச்னையை கண்டித்து, வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, தி.மு.க.,வினருக்கு, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி அழைப்பு விடுத்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா காலத்தில், தமிழக அரசு, மின் கட்டணத்தில், கடந்த மாத அளவீடு தொகையை செலுத்த நிர்ப்பந்தித்து, கட்டண உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. ஊரடங்கில், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். முந்தைய மாதத்துக்கு செலுத்திய மின் கட்டணத்தை குறைப்பதற்கு பதில், அத்தொகைக்குரிய யூனிட்டு களை கழிக்க வலியுறுத்தியும், அப்படி குறைக்கப்படும் தொகையை, மாத தவணையில் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஜூலை 21(நாளை) காலை, 10:00 மணிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்பட அனைத்து நிர்வாகிகள் ஒன்றிணைந்து, அவரவர் வீடு, கடைகளின் முன், சமூக இடைவெளியுடன், கறுப்பு கொடியை ஏற்றியும், கைகளில் பிடித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X