பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பென்னாகரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 13, 14 வயது சிறுவர்கள், எட்டு வயது சிறுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த, 26 வயது பெண் மற்றும், 7 வயதுடைய அவரது மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதே போன்று, மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனாவால், 85 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில், இதுவரை கொரோனா பாதிப்பு நேற்று உச்சகட்டமாக, 85 ஆக பதிவானது. பொதுமக்கள் மட்டுமின்றி, செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும், கொரோனா பரவி வருவதால், மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில், கொரோனா பாதிப்பை தடுக்க, மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X