பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்டத்தில் பரவலான கனமழை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில், 20 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, பாலக்கோட்டில், 14 மி.மீ., என, மொத்தம், 34 மி.மீ., மழையளவு பதிவானது. இந்நிலையில் நேற்று மாலை, 3:00 மணிக்கு மேல், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, நல்லம்பள்ளி உட்பட, மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக, தர்மபுரி நகரில் மாலை, 6:00 மணி வரை விட்டு, விட்டு கன மழை பெய்தது. இதனால், முழு ஊரடங்கான நேற்று, தர்மபுரி சாலைகளில் வாகனங்கள் இன்றி காணப்பட்டதால், மழை நீர் சாலைகளில், மழைத்துளிகள் தெறிக்க ஆறு போல் ஓடியது. கடந்த சில தினங்களாக மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் நேற்று மாலை, 5:00 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய நல்ல மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X