பொது செய்தி

தமிழ்நாடு

3வது ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இம்மாதத்தின் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கிருஷ்ணகிரியில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, இந்த மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கை கடைப்பிடிக்க அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100 சதவீதம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி நகரிலுள்ள மருந்து கடைகள் மற்றும் ஆவின் பால் கடைகள் தவிர பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி, டீ கடைகள் உள்பட அனைத்து கடைகளும், நூறு சதவீதம் மூடப்பட்டிருந்தன. மருந்து வாங்கவும், மருத்துவமனைக்கு சென்றவர்களை தவிர, மற்றவர்கள் வெளியில் வராததால், சாலைகள் வெறிச்சோடின. தற்போது, கிருஷ்ணகிரியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் வெளியே வருவதை பெருமளவு தவிர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X