பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனம் கொள்முதல் செய்ய மறுப்பு: 2,000 லிட்டர் பால் கல்குவாரியில் ஊற்றி அழிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்யாததால், 2,000 லிட்டர் பால், கல்குவாரியில் ஊற்றி அழிக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி அடுத்த, பாளேகுளியை சேர்ந்தவர் மாதேஸ், 40; இவர், நாள்தோறும் கிராமங்களில் பால் சேகரித்து, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள, தனியார் பால் நிறுவனத்துக்கு அனுப்புவது வழக்கம். ஊரடங்கால் பால் நிறுவனங்கள், 50 சதவீதம் பால் வாங்குவதை நிறுத்தி உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாதேஸ், 2,000 லிட்டர் பாலை கொண்டு சென்றபோது, அதை வாங்காமல் அந்நிறுவனம் திருப்பி அனுப்பியது. இதனால், அப்பாலை காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் குளிர்சாதன கிடங்கில் வைத்து பாதுகாத்துள்ளார். ஆனால், சரியான முறையில் குளிர்சாதனம் இயங்காததால், பால் கெடும் சூழல் ஏற்பட்டது. நேற்று காலை, அந்த பாலை எடுத்துக்கொண்டு காவேரிப்பட்டணம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி என, பல்வேறு பால் நிறுவனங்களிடம் அலைந்துள்ளார். ஆனால், எங்கும் பாலை வாங்க முன்வராத நிலையில், வேறு வழியின்றி, இவரது கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில், 2,000 லிட்டர் பாலையும் கொட்டியுள்ளார். அருவி போல், பால் விழுந்ததை அப்பகுதி இளைஞர்கள் மொபைல் போனில் படம் பிடித்த வீடியோ, வைரலானது. இதுகுறித்து மாதேஸிடம் கேட்டபோது, ''2,000 லிட்டர் பாலை எந்த தனியார் நிறுவனமும் கொள்முதல் செய்ய மறுத்தன. பால் கெடும் சூழ்நிலை ஏற்பட்டதால், அதை மக்களுக்கும் வழங்க முடியாமல் போனது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X