பொது செய்தி

இந்தியா

இட ஒதுக்கீடு என்ற பழைய கயிறை பிடித்து தொங்குவதா?

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
இட ஒதுக்கீடு,   ராமதாஸ், வைகோ, தினகரன்

'எத்தனை காலத்திற்கு தான், இட ஒதுக்கீடு என்ற பழைய கயிறை பிடித்து, தொங்கி கொண்டிருக்கப் போகிறீர்களோ... ' என, கவலை தெரிவிக்கத் துாண்டும் வகையில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை:

இனியும் தாமதிக்காமல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

'என்ன செய்வது, அரசு சட்ட திட்டங்கள், எந்த காலத்திலும் ஏழைகளுக்கு சாதகமாக இல்லையே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர், பிரசாத் அறிக்கை:

டாஸ்மாக் கடைக்கு, 24 மணி நேரமும், போலீசார் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பல ஆயிரம் மக்களுக்கு குடிக்க, சாராயம் கொடுக்க, அரசு நிர்வாகம் முயற்சி செய்கிறது. ஆனால், ஏழை தாய்மார்கள் மீன் கடை வைக்க, முறையாக ஏற்பாடு செய்யாமல், கடைகளை மூடுவது, மனித உரிமை மீறல்; சட்ட விரோதம்.

'ஒரு குறிப்பிட்ட மதத்தை, பல ஆண்டுகளாக வசைபாடி, தங்களை செழிப்பாக ஆக்கிக் கொண்டவர்கள், சமீப காலமாக ஆட்டம் கண்டு வருகின்றனர்...' என கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மற்ற மதத்தை தரக்குறைவாக பேசுவதற்கு உரிமை இல்லை. மறைந்த தலைவர்களை இழிவுப்படுத்தியும், மத உணர்வுகளை துாண்டியும், அவற்றின் வழியே, அரசியல் லாபம் பார்க்க யார் நினைத்தாலும், அவர்களுக்கு தமிழக மண்ணில் இடமில்லை.

'கண்டிப்பாக, கல்லுாரி மாணவர் சமுதாயம் உங்களை வாழ்த்தும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ அறிக்கை:


latest tamil news




மஹாராஷ்டிரா, டில்லி மாநில அரசுகளை பின்பற்றி, தமிழக அரசும், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உள்மதிப்பீடுகளின் அடிப்படையில், பட்டங்கள் வழங்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'சரியாக சொன்னீர்கள். இந்த விஷச் செடிகளை அகற்ற, அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:

தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சிதைத்து, ஹிந்துக்கள் -- முஸ்லிம்கள் இடையே, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், சிலரால் திட்டமிட்டு சதிகள் அரங்கேற்றப்படுகின்றன. இது போன்ற விஷச் செடிகளை, உடனே அகற்ற வேண்டும்.

'இப்போதைய தொழிலாளர்களால், ரயில்வேயின் வேலைத்தரம் சிறப்பாகவா இருக்கிறது...' என, கேட்கத் துாண்டும் வகையில், தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன், மதுரை கோட்ட செயலர், சங்கரநாராயணன் பேட்டி:

தெற்கு ரயில்வேயில் எல்லா ரயில்வே கோட்டங்களிலும் பதவிகளை குறைக்க வேண்டும் என மேலதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ரயில்வே சேவையின் தரம் குறைய வாய்ப்பு உருவாகும். படித்து முடித்து வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஜூலை-202016:45:14 IST Report Abuse
இந்தியன் kumar ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிற கனவை நனவாக்க எந்த அரசியல் கட்சியாவது முன் வருமா ???
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஜூலை-202019:06:56 IST Report Abuse
Sampath Kumar என்னத்த சொல்லி ஏது உரைத்தாலும் கந்தனுக்கு புத்தி கவட்டைக்குள் தான் இந்தியா நாடு ? சாதிகளால் கட்டு அமைக்கப்பட்ட ஒரு சீட்டு கட்டு ஒரு சீட்டை ஓர்வினால் போதும் மொத தேசமும் சரிந்து விடும் பிரிட்டிஸ்காரன் சுமை கொடுத்து விட்டு போகவில்லை இதன் சூட்சுமத்தை unarthuthaan கொடுத்து உள்ளான்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202017:30:41 IST Report Abuse
Vena Suna பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் ஒரு முறை தான் பயன்படுத்த முடியும் என்று இருக்க வேண்டும். படிப்பிற்கு ஒருமுறை பயன்படுத்தினால், பிறகு வேலைக்கும் அதனை பயன்படுத்த முடியாது. மருத்துவதத்துக்கு பொறியியலுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X