பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதிப்பு அதிகரித்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும்: அமைச்சர் வீரமணி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: ''கொரோனா பாதிப்பு அதிகரித்தால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கும் சூழ்நிலை ஏற்படும்,'' என, அமைச்சர் வீரமணி கூறினார்.


திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்களை, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து, கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி., விஜயகுமார் மற்றும் சுகாதாரத் துறையினருடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வு செய்தார். பின், அமைச்சர் வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை, 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,500 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை ஒழிக்க, பொது மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X