பொது செய்தி

தமிழ்நாடு

காக்கைகளிடம் சிக்கி தவித்த அரிய வகை ஆந்தை மீட்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வந்தவாசி: வந்தவாசியில், காக்கைகளிடம் சிக்கி தவித்த, அரிய வகை ஆந்தையை பொதுமக்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கோட்டை மூலை அருகே நேற்று, அரிய வகை ஆந்தை ஒன்று, காக்கைகளிடம் சிக்கித் தவித்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அதை மீட்டு, வனத்துறையினக்கு தகவல் அளித்தனர். அதன்படி, வனக்காப்பாளர் ராமமூர்த்தி அங்கு சென்றார். அவரிடம் பொதுமக்கள், மீட்கப்பட்ட அரியவகை ஆந்தையை ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'இந்த ஆந்தை வெளிநாட்டு அரிய வகையை சேர்ந்தது. ஆந்தைக்கு காயம் எதுவும் இல்லை. எனவே அதை, வனப்பகுதியில் விடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X