சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் பதுக்கிய நாட்டுவெடி வெடித்து வாலிபர் படுகாயம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, காட்டுப்பன்றி வேட்டைக்கு, வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி வெடித்ததில், வாலிபர் காயமடைந்தார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், துருஞ்சிக்குப்பம் சித்தேரியை சேர்ந்தவர் மணிவண்ணன், 25; அதே பகுதியை சேர்ந்த, இவரது உறவினர் பட்டுஅம்மாள் என்பவரது, நிலக்கடலை வயலை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வந்தன. அவற்றை வேட்டையாட, மணிவண்ணன் கடந்த, 10ல், பட்டம்மாள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருளை கையால் எடுத்தபோது, திடீரென வெடித்ததில், அவரது வலது கையில் படுகாயம் ஏற்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, துருஞ்சிகுப்பம் வி.ஏ.ஓ. தமிழ்செல்வன், கொடுத்த புகாரின்படி, சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X